< Back
மாநில செய்திகள்
சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு

தினத்தந்தி
|
19 Oct 2022 1:58 AM IST

சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கீழராமநல்லூர் கிராமம். இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் தீவு போன்று அமைந்துள்ளது. தற்போது காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கீழராமநல்லூரில் போக்குவரத்துக்கான சாலை முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது. குடியிருப்பு பகுதியில் நீர் புகாதது பொதுமக்களுக்கு ஆறுதலாக உள்ளது. இருப்பினும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் படகுகள் மூலமே கிராமத்திற்கு தேவையானவற்றை கொண்டு சென்று சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதேபோல் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில் மருதையாற்றில் இருந்து தண்ணீர் பெருமளவு வெளியாகி, கிராமப்புறங்களில் சூழ்ந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்