< Back
மாநில செய்திகள்
கடுமையான போக்குவரத்து நெரிசல்:  விக்கிரவாண்டி பகுதியில் தொடர் விபத்துகள்  தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்
விழுப்புரம்
மாநில செய்திகள்

கடுமையான போக்குவரத்து நெரிசல்: விக்கிரவாண்டி பகுதியில் தொடர் விபத்துகள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர்

தினத்தந்தி
|
22 Oct 2022 6:45 PM GMT

கடுமையான போக்குவரத்து நெரிசலால் விக்கிரவாண்டி பகுதியில் தொடர் விபத்துகள் நடந்தது.


விக்கிரவாண்டி,


தீபாவளி பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் விதமாக, சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி பஸ், ரெயில் மற்றும் கார்களில் பயணித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் தென்மாவட்டங்களுக்கு விக்கிரவாண்டி வழியாக செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இதை தொடர்ந்து, நேற்றும் வாகனங்கள் அதிகளவில் சென்றன. இதனால் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சுங்கச்சாவடியை கடந்து சுமார் 48 ஆயிரம் வாகனங்கள் சென்று இருக்கின்றன.

கார்கள் மோதல்

அதே நேரத்தில் விபத்துகளும் சுங்கச்சாவடியையொட்டிய பகுதிகளில் நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு என்கிற இடத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.

அப்போது, முன்னால் சென்ற ஒரு கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்த கார்களில 4 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்இழப்புகள் ஏதும் நிகழவில்லை. லேசான காயங்களுடன் அனைவரும் உயிர்தப்பினார்கள்.

10 -க்கும் மேற்பட்ட விபத்துகள்

இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில், அதே பகுதியில் முன்னால் சென்ற கார், டிரைவர் பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த அரசு விரைவு பஸ் காரின் மீது மோதியது. இதிலும் காரில் வந்தவர்கள் லேசான காயமடைந்தனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவு மட்டும் விக்கிரவாண்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிறு, சிறு தொடர் விபத்துகள் நடந்துள்ளது.விபத்துகளால் அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடனுக்குடன் சீரமைத்தனா. மேலும் விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்