< Back
மாநில செய்திகள்
சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்
மாநில செய்திகள்

சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
6 Oct 2023 6:52 PM IST

சென்னையில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 8-ந்தேதி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி உட்பட மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்