< Back
மாநில செய்திகள்
ஓ.எம்.ஆர் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்...!
மாநில செய்திகள்

ஓ.எம்.ஆர் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்...!

தினத்தந்தி
|
16 Dec 2023 9:47 AM IST

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை,

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நெரிசலை சமாளிக்க பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, இன்று முதல் சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சோழிங்நல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும். காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்நல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ்.ஆர். மால் அருகே இடது புறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சங்கச்சுவாடியில் புதிய யு திருப்பம் மூலம் சோழிங்நல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதைப் போலவே கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாலையில் புதிய யூ திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்