சென்னை
மழைநீர் கால்வாய் அமைப்பதால் கத்திப்பாராவில் போக்குவரத்து மாற்றம்
|சென்னை பெருநகர போக்குவரத்து தெற்கு மாவட்ட போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி.சாலை உள்செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் இன்று(சனிக்கிழமை) மற்றும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கத்திப்பாரா பகுதியில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
*ஜி.எஸ்.டி. சாலையில் விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தின் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்று அடையலாம்.
*பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதும் இன்றி வழக்கமான சாலையில் கத்திப்பாரா வழியாக செல்லலாம்.
*வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் தண்டுமா நகர் பகுதியில் திரும்பி சென்று அங்கிருந்து சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ்நிலையம் வந்து அண்ணாசாலையை சென்றடையலாம்.
*வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலையில் இடது புறமாக திரும்பி திரு.வீ.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணாசாலையை சென்றடையாலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.