< Back
மாநில செய்திகள்
சிக்னல் கம்பம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

சிக்னல் கம்பம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
29 Sept 2023 3:15 AM IST

சிக்னல் கம்பம் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தபோதும், மாலையில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றதால், முக்கிய சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில், கல்லுக்குழி மேம்பாலத்தின் இறக்கத்தில் சாலையின் நடுவில் இருந்த சிக்னல் கம்பம் திடீரென சரிந்தது. அது கீழேவிழும் நிலையில் இருந்ததுடன், அந்த வழியாக வந்த பஸ்சின் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், அந்த சிக்னல் கம்பத்தை சரிசெய்தனர். பின்னர் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்