கரூர்
காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு
|காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரையை நோக்கி சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 400 அடி நீளமுள்ள காற்றாலை விசிறியின் இறக்கையை நீளமான லாரி ஒன்று ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த லாரி தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி வழியாக செல்லும்போது குறுகிய சாலையாகவும், வளைவாகவும் இருந்ததால் திருப்ப முடியாமல் நின்றது. இதனால் பின்னால் ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து வந்தன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் வெகு தூரம் லாரியின் பின்னாலேயே அனைத்து வாகனங்களும் சென்றன. தற்பொழுது அடிக்கடி மின்விசிறி இறக்கைகளை ஏற்றிக் கொண்டு அதிக அளவில் லாரிகள் செல்வதால் அடிக்கடி மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காற்றாலை விசிறி இறக்கையை ஏற்றி செல்லும் லாரிகள் இரவு நேரத்தில் பயணித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.