< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்

தினத்தந்தி
|
18 Sep 2022 6:45 PM GMT

விக்கிரவாண்டி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கும் விழா பாப்பனப்பட்டில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு பாராம்பரிய நெல் விதைகளை 50 சதவிகித மான்ய விலையில் வழங்கினார்.

பின்னர் உதவி இயக்குனர் சரவணன் பேசும்போது விவசாயிகள் வயல்களில் நடவு செய்யும் போது வரப்பு ஓரங்களில் உளுந்து பயிரிட்டு பூச்சி நோய்களிலிருந்து நெற்பயிரை காத்து, கூடுதல் மகசூல் பெறலாம். இயற்கை முறையில் நெல்சாகுபடி செய்ய அரசு 50 சதவிகித மானியத்தில் விதைகளை வழங்குகிறது என்றார். இதில் ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரவி துரை, ஜெயபால், கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்துராசன், ஒன்றிய கவுன்சிலர்கள், வேளாண்மை அலுவலர் திவ்யபிரியா, உதவி வேளாண்மை அலுவலர் ராயப்பன், கண்காணிப்பாளர் பாக்யராஜ், அட்மா திட்ட உதவி அலுவலர் விக்னேஷ், விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்