< Back
மாநில செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-கலெக்டர்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-கலெக்டர்

தினத்தந்தி
|
23 Jun 2023 5:15 PM IST

திருவண்ணாமலையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.

கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலையில் இன்னும் ஒரு வருடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மார்க்கெட்டி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

திருவண்ணாமலை உள்பட மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. சாலையோர ஆக்கிரமிப்புகளால் அதிகளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மட்டுமின்றி ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளது.

10 ரூபாய் நாணயம்

கார்த்திகை தீபம், சித்திரா பவுா்ணமியின் போது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் சூப்பிரண்டுடன் சென்று நடந்து சென்று ஆக்கிரமிப்புகள் அகற்றினோம். ஆனால் அந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் வந்து உள்ளது.

வியாபாரிகள் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களில் காலாவதி தேதி குறித்து அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

உணவகங்களில் உணவு பொருட்கள் தயாரிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனிப்பார்கள்.

10 ரூபாய் நாணயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயத்தை வணிகர்களும், பொதுமக்களும் ஏற்று கொள்கின்றனர். வங்கிகளில் அது வாங்குவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. வங்கியாளர்களிடம் பேசி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பெரிய அளவிலான பேனர்கள் வைக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் பல்வேறு பகுதியில் பேனர் வைக்கப்படும் பேனர் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்க நிர்வாகி ஜி.எஸ்.டி. குறித்தும், தரசு முத்திரை கட்டணம், நகராட்சி கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அதற்கு கலெக்டர் விளக்கம் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், வணிகர் சங்க மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், பொருளாளர் கணேசன், செயலாளர் நாகராஜ், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில இணை செயலாளர் செந்தில்மாறன், திருவண்ணாமலை தாலுகா தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ரங்கநாதன், வணிகர் நல அறக்கட்டளை தலைவர் ஏ.ஆர்.மணி, மாவட்ட ஓட்டல் சங்கத் தலைவர் தனக்கோட்டி உள்பட அனைத்து தாலுகா வணிகர் சங்க நிர்வாகிகள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்