கடலூர்
வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|நெய்வேலி வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
நெய்வேலி:
நெய்வேலி மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தத்தில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கங்கைகொண்டான் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் வழங்கியவர்களுக்கு மந்தாரக்குப்பம் பகுதியில் காலியாக இருக்கும் இடங்களில் வீட்டுமனை வழங்க வேண்டும், கங்கைகொண்டான் பேரூராட்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், பொதுநூலகம் மற்றும் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுகழிப்பிட கட்டிடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பபாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் சங்கர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.பிச்சை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோதி பாஸ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் மதர்ஷா, தே.மு.தி.க. நகர செயலாளர் பாபு, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் இப்ராஹிம், கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் பேரூர் தலைவர் தெய்வசிகாமணி, முக்குலத்தோர் புலிப்படை மாவட்ட தலைவர் தென்றல், கட்டுமான தொழிற்சங்க மாவட்ட தலைவர் சபரி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.