< Back
மாநில செய்திகள்
தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதிகோரி வியாபாரிகள் மனு
கரூர்
மாநில செய்திகள்

தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதிகோரி வியாபாரிகள் மனு

தினத்தந்தி
|
16 Oct 2023 11:12 PM IST

தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதிகோரி வியாபாரிகள் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட கரூர் பஸ் நிலைய பழ வியாபாரிகள் சங்கம் சார்பில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தள்ளுவண்டி கடை அமைத்து பழக்கடை, பலகாரக்கடை உள்ளிட்ட தொழில் செய்து வருகிறோம். மாநகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தில் பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி தொழில் செய்து வருகிறோம்.தற்போது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கடையை திறப்பதற்கு எங்களுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்