< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வியாபாரி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வியாபாரி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
31 Aug 2022 2:48 PM IST

திருவள்ளூர் அருகே வியாபாரி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

வேலூர் மாவட்டம் சிவபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவர் ஏரியில் மீன்களை ஏலம் எடுத்து தொழில் செய்து வந்தார். இவர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு ஓம் நகர் பகுதியில் உள்ள பஞ்சமந்தாங்கல் ஏரியின் கரையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரிக்கரையில் பிணமாக இருந்த கோவிந்தசாமியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொன்று ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்