< Back
மாநில செய்திகள்
வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்

தினத்தந்தி
|
3 Oct 2023 1:24 AM IST

தென்காசியில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

தென்காசி வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரசூல் தீன், துணைச் செயலாளர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜா வரவேற்றார். பொருளாளர் முகைதீன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பழனி நாடார் எம்.எல்.ஏ., மாநில பேரமைப்பு கூடுதல் செயலாளரும் நெல்லை மாவட்ட வர்த்தக கழக தலைவருமான ஆர்.கே.காளிதாசன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஹோட்டல்கள், மற்றும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும். தென்காசி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள புறவழிச் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரமைப்பின் மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜா, மாவட்ட வர்த்தக கழக செயலாளர் சாலமோன், பொருளாளர் நவாப் மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்