< Back
மாநில செய்திகள்
முல்லைப்ெபரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி:  தேடும் பணி தீவிரம்
தேனி
மாநில செய்திகள்

முல்லைப்ெபரியாற்றில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி: தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
22 Aug 2022 10:08 PM IST

முல்லைப்ெபரியாற்றில் வியாபாரி அடித்து செல்லப்பட்டார்

சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). இவர் அரிசி கடை வைத்துள்ளார். ‌இன்று காலை இவர், முல்லைப்பெரியாற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பாா்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சின்னமனூர் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி பாஸ்கரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் சுமார் 8 மணி நேர தேடுதலுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்டது. ஆற்றில் தண்ணீர் திறப்பை குறைத்த பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்