< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே லாரி மோதி வியாபாரி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே லாரி மோதி வியாபாரி பலி

தினத்தந்தி
|
29 Sept 2023 7:11 PM IST

திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த வியாபாரி மீது லாரி மோதி பலியானார்.

வியாபாரி

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 62) இவர் வீட்டின் அருகே பொரி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அருகே உள்ள மகளின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு பின்னர் பொரி கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் ராஜாஜி சாலையில் வரும்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோகன் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகனின் வலது காலில் மேல் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமியம்மாள் (வயது 65). நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள டீ கடைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்