< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி

தினத்தந்தி
|
11 Oct 2022 2:36 PM IST

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி பலி்யானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). பூ வியாபாரி. இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், ஆனந்த் (16), என்ற மகனும், தீபிகா (13) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பெரியபாளையம்-புதுவயல் நெடுஞ்சாலையில் ஆரணி சமுதாயக்கூடம் அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார் குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்