< Back
மாநில செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரி மோதி வியாபாரி பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரி மோதி வியாபாரி பலி

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் வசித்து வந்தவர் ஷான்லால் மகன் வினோத் (வயது 27). வியாபாரியான இவர் மோட்டார் சைக்கிள் மூலம் கிராமம், கிராமமாக சென்று பிளாஸ்டிக் சேர்களை விற்பனை செய்து வந்தார். வினோத் நேற்றுமுன்தினம் கூவாகம் சாலையில் இருந்து பெரியசெவலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்