< Back
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டையில் சரக்கு லாரி மோதி வியாபாரி பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஊத்துக்கோட்டையில் சரக்கு லாரி மோதி வியாபாரி பலி

தினத்தந்தி
|
28 Jan 2023 2:20 PM IST

ஊத்துக்கோட்டையில் சரக்கு லாரி மோதி வியாபாரி பலியானார்.

ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை உத்திரபிரதேசத்தை சேர்ந்த டிரைவர் சுனில் யாதவ் (வயது 35 ) ஓட்டினார். நேற்று மதியம் ஊத்துக்கோட்டை நகர மையப் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க நின்று கொண்டிருந்த ஊத்துக்கோட்டை எட்டிக்குளம் பகுதியை சேர்ந்த வாழைப்பழ வியாபாரி மூர்த்தி (65) என்பவர் மீது லாரி மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி பலியானார். தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் ஊத்துக்கோட்டை போலீசார் மூர்த்தியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் சுனில்யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்