திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
|திருவள்ளூர் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த கசவநல்லாத்தூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சந்தான மூர்த்தி (வயது 26). இவரது மனைவி ரேகாதேவி. சந்தானமூர்த்தி மினி வேனில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் இவர்களுக்கு இடையே இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் எழுந்த சந்தான மூர்த்தி கீழ் அறைக்கு வந்து அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ரேகா தேவி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சந்தானமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.