< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
50 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
|24 Jun 2022 9:07 PM IST
வேடசந்தூர் அருகே குடோனில் 50 கிலோ பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதியில் கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எரியோடு வடக்கு தெருவில் வியாபாரி தங்கவேல் (வயது 58) என்பவருடைய குடோனில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்பேது அந்த குடோனில் விற்பனைக்காக 50 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.