< Back
மாநில செய்திகள்
வியாபாரி கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வியாபாரி கைது

தினத்தந்தி
|
13 Oct 2022 12:15 AM IST

பழனி அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54). இவர், அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அந்த கடையில் சோதனை நடத்தி 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.




மேலும் செய்திகள்