< Back
மாநில செய்திகள்
தொழிற்சங்க வாயிற்கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தொழிற்சங்க வாயிற்கூட்டம்

தினத்தந்தி
|
30 July 2022 12:28 AM IST

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயலாளர் பாண்டியன், ஓய்வு பெற்றவர் அமைப்பின் மண்டல தலைவர் போஸ், மத்திய சங்க பொருளாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 40 ஆண்டுகளாக நடைபெறுகின்ற ஊதிய விகிதத்தை மீண்டும் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ. ஆயிரம் என்பதை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசப்பட்டது. முடிவில் மத்திய சங்க நிர்வாகி வேலுச்சாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்