திருவண்ணாமலை
குப்பைகள் அகற்றும் பணிக்கான டிராக்டர்கள்
|கலசபாக்கம் ஒன்றியத்தில் குப்பைகள் அகற்றும் பணிக்கான டிராக்டர்களை ஊராட்சி தலைவர்களிடம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வாகனங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், கலசபாக்கம் ஒன்றியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கலசபாக்கம், கேட்டவரம்பாளையம், வீரளூர், கிடாம்பாளையம் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டரும் ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் டிப்பரும் என குப்பைகளை எடுத்துச் செல்ல புதிய டிராக்டர்களை ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த டிராக்டர்களை எக்காரணத்தைக் கொண்டும் தனிநபர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் உள்பட ஊராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.