< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள்
|10 April 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டையில் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் எலவனாசூர்கோட்டை, எறையூர், குன்னத்தூர், கிளியூர், காட்டுஎடையார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு விவசாய தேவைகளுக்காகவும் சுகாதார பணிகளுக்காகவும் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகங்களின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான ஏ.ஜே. மணிக்கண்ணன் தலைமை தாங்கி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் டிராக்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், உளுந்தூர்பேட்டை நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தகுமார், சிவா, பாலசிங்கம், அனுசியா ஆரோக்கியராஜ், துணைத்தலைவர் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.