< Back
மாநில செய்திகள்
தேனியில் விநாயகர் சிலை ஊர்வலம்: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி
மாநில செய்திகள்

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலம்: டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

தினத்தந்தி
|
9 Sept 2024 1:09 AM IST

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தேனி,

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டம் தேவாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவின்போது விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்