< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - விவசாயி பலி
|1 July 2022 6:43 PM IST
நல்லம்பள்ளி அருகே 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மேல்ஈசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது50) விவசாயி. இவருக்கு சொந்தமான பழுதான டிராக்டரை ஒன்றை சாமிசெட்டிப்பட்டி பகுதியில் சரிசெய்து கொண்டு, மீண்டும் டிராக்டர் மூலம் தனது கிராமம் செல்வதற்க்காக ஜருகு ஏரிக்கரை மீது ரவி இன்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஏரிக்கரையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்துக்கு உள்ளாது. இந்த விபத்தில் விவசாயி ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.