< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
வடபொன்பரப்பி அருகேடிராக்டர் கவிழ்ந்து விபத்து
|20 March 2023 12:15 AM IST
வடபொன்பரப்பி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் கிராமத்தில் இருந்து டிராக்டர் ஒன்று கரும்பு பாரம் ஏற்றுவதற்காக கானாங்காடு நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. வடபொன்பரப்பி அருகே கிராம சாலையில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து மீட்பு வாகனம் மூலம் விபத்துக்குள்ளான டிராக்டர் மீட்கப்பட்டது.