< Back
மாநில செய்திகள்
பண்ருட்டியில்  டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

பண்ருட்டியில் டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
6 Aug 2022 10:49 PM IST

பண்ருட்டியில் டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


பண்ருட்டி,

ரிஷிவந்தியத்தில் இருந்து நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு நேற்று முன்தினம் இரவு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்த டிராக்டர் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் வந்தபோது திடீரென, டிராக்டர் கவிழ்ந்தது. இதனால் கரும்புகள் ரோட்டில் கொட்டியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடன் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். விபத்தில் டிராக்டர் டிரைவர் ரிஷிவந்தியத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 55) லேசான காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்