< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மரம் விழுந்ததில் டிராக்டர் சேதம்
|1 Oct 2023 2:09 AM IST
மரம் விழுந்ததில் டிராக்டர் சேதமடைந்தது.
துவாக்குடி:
நவல்பட்டு பகுதியில் நேற்று காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சோழமாதேவி பகுதியில் புளியமரம் முறிந்து, அருகில் நின்ற டிராக்டர் மீது விழுந்தது. இதில் டிராக்டர் சேதமடைந்தது. ேமலும் அந்த மரம் அருகில் உள்ள ஆரோக்கியதாஸ் என்பவரது வீட்டின் மீதும் விழுந்துள்ளது. இந்த மரத்தை அகற்றகோரிஆரோக்கியதாஸ் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று மாலை முதல் அப்பகுதியில் மின்வினியோகம் தடைபட்டது.