< Back
மாநில செய்திகள்
போரூரில் தண்ணீர் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்
சென்னை
மாநில செய்திகள்

போரூரில் தண்ணீர் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்

தினத்தந்தி
|
24 March 2023 12:43 PM IST

போரூரில் தண்ணீர் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயம் அடைந்தார்.

பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு போரூர் நோக்கி ரமேஷ் (33) என்பவர் டிராக்டரை ஓட்டிச்சென்றார். மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக சென்று திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டி பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போக்குவரத்து போலீசார், இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை கிரேன் எந்திரம் மூலம் அகற்றினர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்