< Back
மாநில செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணி: விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
மாநில செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் சேவையில் மாற்றம்

தினத்தந்தி
|
24 Sept 2024 7:30 PM IST

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள், தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக ரெயில்களின் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் திருச்சி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06892) விருத்தாசலம்- விழுப்புரம் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) பகுதியளவில் ரத்து செய்யப்பட்ட உள்ளது. இந்த ரெயில் விருத்தாசலத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண் 06891) நாளை (புதன்கிழமை) விழுப்புரம்- விருத்தாசலம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்ட உள்ளது. இதன் காரணமாக இந்த ரெயில் விருத்தாசலத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும்.

விழுப்புரத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 06689) விழுப்புரம்- திருத்துறையூர் இடையே வருகிற 25, 27-ந் தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் திருத்துறையூரிலிருந்து மயிலாடுதுறைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இதேபோல் புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16116) புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 8.05 மணிக்கு புறப்படும். புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06738) விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும். விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 06737) ஆகிய ரெயில்கள் வருகிற 27-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

திருவாரூரில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் திருவாரூர்- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06690) வருகிற 25,27-ந் தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 45 நிமிடங்களும், மன்னார்குடியிலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருப்பதி வரை செல்லும் மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17408) வருகிற 25, 27-ந் தேதிகளில் வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்களும் நிறுத்தி பின்னர் இயக்கப்படும்.

அதேபோல் காட்பாடியில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் காட்பாடி- விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண் 06697) வருகிற 27-ந் தேதி வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 40 நிமிடங்களும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரெயில் (வண்டி எண் 06025) வருகிற 27-ந் தேதி வசதிக்குரிய ரெயில் நிலையத்தில் 20 நிமிடங்களும் நிறுத்தி பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்