தண்டவாள பராமரிப்பு: சென்னை சென்டிரல்-பித்ரகுண்டா இடையே ரெயில் சேவை ரத்து
|தண்டவாள பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து பித்ரகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விஜயவாடா பகுதியில் தண்டவாள பராமரிப்பு காரணமாக, சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 17238) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 3-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதியிலிருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் சிறப்பு ரெயில் (07659) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06417) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்திலிருந்து காலை 7.10 மணிக்கு கடப்பா புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06401) நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16854) காட்பாடி-திருப்பதி இடையே நாளை (30-ந்தேதி) முதல் நவம்பர் 5-ந்தேதி வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது