< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
தடுப்பணையில் மூழ்கியவரை காப்பாற்றிய சுற்றுலா பயணிகள்
|25 Oct 2023 2:30 AM IST
பொள்ளாச்சி அருகே தடுப்பணையில் மூழ்கியவரை சுற்றுலா பயணிகள் காப்பாற்றினர்.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை உள்ளது. நேற்று தடுப்பணையில் குளித்த கோவையை சேர்ந்த ஒருவர் தனது மனைவி, மகன் கண் எதிரே நீரில் மூழ்கினார். இதை பார்த்த கரையின் மேல் நின்றிருந்த பொதுமக்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் அவரை காப்பாற்றினர். ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் அவர் மூழ்கி இறந்திருக்கக்கூடும். எனவே, வால்பாறையை போன்று ஆழியாறில் உள்ள தடுப்பணையை ஆபத்தான பகுதியாக அறிவித்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும். ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.