குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்
|காலாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால் குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த 3 மாத காலமாக சீசன் களைகட்டி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் மழை இல்லாததாலும், குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைந்து வருகிறது.
தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அருவிகளில் வரும் நீரின் வரத்து குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு பல மணி நேரம் காத்திருந்து குறைவாக விழும் அருவி நீரில் குளித்து செல்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கினால் மட்டுமே அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும் குற்றாலம், தென்காசி நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.