< Back
மாநில செய்திகள்
வார இறுதியை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

வார இறுதியை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
24 July 2022 7:51 PM IST

குற்றாலத்தில் கடந்த 2 தினங்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தொடங்கியதில் இருந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர். ஐந்தருவி, மெயின் அருவி, தேனருவி உள்ளிட்ட அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் நேற்றும், இன்றும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து, அருவிகளில் குளித்து, படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அருவிகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்