ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|சர்வதே சுற்றுலா இடமான ஊட்டிக்கு காந்தி ஜெயந்தி, விஜயதசமி விடுமுறை முன்னிட்டு 72 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
ஊட்டி:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், இரண்டாம் சீசன் முன்னிட்டு, மலர் காட்சி மாடத்தில் மலர்த்தொட்டி வைக்கபட்டுள்ளது.
இந்த ஆண்டு பூங்காவில் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான 4 லட்சம் மலர்ச்செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூ பூத்து சுற்றுலா பயணகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சி அளித்து வருகிறது
கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே போன்ற இடங்களிலிருந்து விதைகள் பெறப்பட்டு டேலியா, சால்வியா, இன்கோ மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், டியுப்ரஸ்பிகோனியா, ஜெரேனியம் அடங்கிய 10,000 மலர்த்தொட்டிகள் மலர்காட்சி திடலில் அமைந்து உள்ளது.
மேலும் நெகிழ்ப்பையை தவிர்த்து மஞ்சப்பையினை பயன்படுத்தும் நோக்கமாக 5,000 மலர்தொட்டிகள் சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி விடுமுறை முன்னிட்டு சுமார் 72 ஆயிரம் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை கண்டு களித்து சென்று உள்னனர்.