< Back
மாநில செய்திகள்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம்
மாநில செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
13 March 2023 1:55 AM IST

ஏற்காடு:-

ஏற்காட்டிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். அவர்கள், அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விரும்பி செல்லக்கூடிய படகு இல்லத்தில் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிய தொடங்கினர். காலை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய பயண சீட்டு வாங்கிக்கொண்டு படகு சவாரிக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்