< Back
மாநில செய்திகள்
குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்...!
மாநில செய்திகள்

குமரியில் சூரியன் உதயமான காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்...!

தினத்தந்தி
|
22 Jan 2023 9:43 AM IST

கன்னியாகுமரியில் சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. இது ஒரு புகழ்பெற்றசுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசெல்வார்கள். இன்று விடுமுறைநாள் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானசுற்றுலா பயணிகள்வந்துகுவிந்தனர்.

இவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணிசங்கமம் சங்கிலித்துறை கடற்கரைபகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண குவிந்து இருந்தனர். அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது.

இந்த அற்புதகாட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்துரசித்து செல்போனில் படம் எடுத்தனர். பின்னர், முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

குமரியில் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பாதுகாப்பும் பணியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்