கன்னியாகுமரி
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
|விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திருவட்டார்,
விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்களை தேடி செல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கோதையாற்றியில் தற்போது தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அருவியின் அருகில் உள்ள சிறுவர் பூங்கா, அலங்கார நீரூற்று, புல்வெளி ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
மேலும், அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி ெசய்து மகிழ்ந்தனர்.
கூடுதல் போலீசார்
ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் திற்பரப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கூறினர்.
மேலும் அருவிப்பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இங்கு நிரந்தரமாக போலீசாரை நியமித்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.