< Back
மாநில செய்திகள்
வைகை அணையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

வைகை அணையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
19 Dec 2022 11:42 AM IST

தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் சென்றதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

ஆண்டிபட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் பூங்கா, சிறுவர்களை மகிழ்விக்கும் பல்வேறு உபகரணங்கள் உள்ளன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் தற்போது 67.03 அடி நீர்மட்டம் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு சிறிய மதகுகள் வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 1169 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 10 மணிக்கு 1419 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் 250 கன அடி நீர் ஒவ்வொரு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணைக்கு 1025 கன அடி நீர் வருகிறது. பெரிய மதகுகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து சென்றது.

தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் சென்றதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அணையின் இயற்கை அழகை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்