< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
30 Oct 2023 5:39 AM IST

விடுமுறை தினத்தையொட்டி நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளித்து ரசித்தனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.

கோடைகாலம் முடிந்து குளிர்காலம் தொடங்க உள்ளதால் வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். காலையில் சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் வெயில் இல்லாமல் இதமான குளிர்ந்த சூழல் நிலவியதால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகளை காண பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர். பலர் புராதன சின்னங்கள் முன்பு செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்