< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
17 Jan 2024 9:48 AM IST

கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

கன்னியாகுமரி,

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அதிலும் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

அருவிப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து அவர்கள் அருவியின் மேல் பகுதிக்கு சென்று தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண திரண்டனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதே போல் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, லெமூரியா கடற்கரை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்