< Back
மாநில செய்திகள்
கோடைவிடுமுறையையொட்டிகன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கோடைவிடுமுறையையொட்டிகன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
14 May 2023 8:41 PM GMT

கோடைவிடுமுறையையொட்டிகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்தாமரைகுளம்:

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னிகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வர். பின்னர், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவார்கள்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். அதைதொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில்...

பின்னர், அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், படகுத்துறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியதும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.

மாலை நேரத்தில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல், கடற்கரை சாலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுற்றுசூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்