< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தினத்தந்தி
|
25 Dec 2022 8:30 PM GMT

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் 11 ஆயிரம் பேர் படகில் சென்று பார்த்தனர்.

கன்னியாகுமரி:

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் 11 ஆயிரம் பேர் படகில் சென்று பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு தற்போது சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை உற்சாகமாக கண்டு களித்தனர்.

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்

பின்னர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு ரசித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று ஒருநாள் மட்டும் 11 ஆயிரம் பேர் படகில் சென்று பார்வையிட்டனர்.

தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்