ராமநாதபுரம்
தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைையயொட்டி தனுஷ்ேகாடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தனுஷ்கோடி,
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைையயொட்டி தனுஷ்ேகாடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தனுஷ்கோடி
ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதி. இது இந்திய பெருங்கடலும், வங்காளவிரிகுடாவும் சேரும் இடம் ஆகும். அரிச்சல்முனை கடல் பகுதியை பார்ப்பதற்கும் ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் தினமும் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கடலோர போலீசார் எச்சரிக்கை
அங்கு வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் சேரும் இடத்தையும் பார்த்து ரசித்ததுடன் அங்கு நின்று செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதுபோல் கடல் நீரோட்டம் மற்றும் சீற்றமாகவே இருந்ததால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசார், சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்க விடாமல் எச்சரிக்கை செய்து அறிவுறுத்தினர்.
இதேபோல் புயலால் அழிந்து போன கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் உள்ள கட்டிடங்களை பார்ப்பதற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் இருந்த மீன் கடைகளில் மீன் வறுவல், நண்டு, இறால் உள்ளிட்டவைகளை அதிகம் விரும்பி ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.