< Back
மாநில செய்திகள்
கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
6 Oct 2023 1:45 AM IST

அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்திருந்தனர்.

இதனால் கடந்த 4 நாட்களாக கோவை குற்றாலத்துக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவிய தொடங்கினர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடை நீக்கப்பட்டு குளியலுக்கு அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்