< Back
மாநில செய்திகள்
புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
மாநில செய்திகள்

புத்தாண்டையொட்டி வேலூர் கோட்டையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்

தினத்தந்தி
|
1 Jan 2023 8:00 PM IST

வேலூர் கோட்டையில் இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் தொடர்ந்து வந்ததால், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அந்த வகையில் இன்று புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வேலூர் கோட்டையில் இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வந்து சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து அந்த பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதே போல் வேலூர் கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் வேலூர் கோட்டை இன்று களைகட்டியது.


மேலும் செய்திகள்