< Back
மாநில செய்திகள்
குளியல் தொட்டியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குளியல் தொட்டியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
24 July 2023 1:06 AM IST

குளியல் தொட்டியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கல்லணையில் விடுமுறை நாளான நேற்று திருச்சி மற்றும் பிறமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ரசித்து பார்த்தனர். கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, மணிமண்டபம், சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகளின் இருசக்கர வாகனங்கள் கரிகாலன் சிலையை சுற்றியுள்ள இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கல்லணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவிலேயே வெளிவிடப்பட்டதால் சுற்றுலா பயணிகள், சிறுவர்-சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை காவிரியில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்தனர். கல்லணையில் வெண்ணாற்றில் புதிதாக கட்டப்பட்டு இருந்த குளியல் தொட்டியில் இறங்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்தனர். கல்லணை பாலங்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்