< Back
மாநில செய்திகள்
நினைவு சின்னங்களை கட்டணமின்றி பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நினைவு சின்னங்களை கட்டணமின்றி பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
20 Nov 2022 1:37 AM IST

நினைவு சின்னங்களை கட்டணமின்றி பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு தொல்பொருள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான தொல்பொருள் பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களை ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் கட்டணம் இன்றி பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாநகரில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் அரண்மனையில் உள்ள மராட்டா அகழ்வைப்பகம், மணி கோபுரம், தா்பாா் மண்டபம், ஆயுத கோபுரம், ஷாா்ஜா மாடி, மனோரா, மணிமண்டபத்தில் உள்ள ராஜராஜன் அகழ்வைப்பகம், மராட்டா அருங்காட்சியகம் ஆகியவற்றை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கட்டணம் இன்றி பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல் மனோரா, திருபாலத்துறை நெற்களஞ்சியம், மானம்பாடி நாகநாதசாமி கோவில், சடையார்கோவில் சடைமுடிநாதர் கோவில் ஆகியவற்றையும் பொதுமக்கள் பார்வையிட்டனர். வருகிற 25-ந் தேதி வரை கட்டணம் இன்றி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்