< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளியல்
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளியல்

தினத்தந்தி
|
3 Jun 2022 9:02 PM IST

குற்றாலம் அருவியில் குறைவாக விழும் தண்ணீரில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

தென்காசி:

குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. பின்னர் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் படிப்படியாக அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. தற்போது வெயில் அடித்து வருகிறது.

இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று கடுமையான வெயில் அடித்தது. மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து விட்டது. ஐந்தருவியில் இரண்டு கிளைகளில் மட்டும் குறைவாக தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் குறைவாக விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுகிறது. இதனால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

மேலும் செய்திகள்